மனித உரிமை செயற்பாட்டாளர் ருக்கி பெர்ணாண்டோ ரி.ஐ.டியினரால் விசாரணை!

பிரித்தானியாவின் யோர்க் ஷெயர் நகரிலுள்ள யோர்க் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் மனித உரிமைகள் தொடர்பான மாநாட்டில் கலந்துகொள்வதற்காக விமான நிலையம் சென்றபோது ருக்கி பெர்ணாண்டோ பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் தடுத்துவைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன.
பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் சில மணி நேரம் தன்னை விசாரணைக்கு உட்படுத்திய பின்னர் பயணத்தைத் தொடர்வதற்கு அனுமதியளித்ததாக ருக்கி பெர்னான்டோ தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கடந்த அரசாங்கத்தின் காலத்தில் சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் தொடர்ச்சியான அடக்கு முறைகளுக்கு உட்படுத்தப்பட்டு வந்த நிலையில் நல்லாட்சி அரசாங்கத்தில் முதற்தடவையாக மனித உரிமை செயற்பாட்டாளர் ஒருவர் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
நல்லிணக்க செயற்பாடுகள் மற்றும் நல்லாட்சியை உறுதிப்படுத்துவதில் சிவில் சமூகப் பிரதிநிதிகளின் பங்களிப்பை இலங்கை அரசாங்கம் அதிகரிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை தொடர்ச்சியாக வலியுறுத்திவரும் நிலையில் மனித உரிமை செயற்பாட்டாளர் ஒருவர் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் விமான நிலையத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|