மனித உன்னதத்தை நோக்கிய சத்திய சாயி மனித மேம்பாட்டுக் கல்வி முறைக் கண்காட்சி நேற்றுடன் நிறைவு!

சத்தியசாயி கல்வி நிறுவனத்தின் ஏற்பாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை(30) யாழ். சன்மார்க்க மகாவித்தியாலயத்தில் ஆரம்பமாகி இடம்பெற்று வந்த மனித உன்னதத்தை நோக்கிய சத்திய சாயி மனித மேம்பாட்டுக் கல்வி முறைக் கண்காட்சி நேற்றுடன் நிறைவுக்கு வந்தது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை(30) ஆரம்பமான குறித்த கண்காட்சி நிகழ்வை யாழ்ப்பாண வலயக் கல்விப் பணிப்பாளர் ஆ. தெய்வேந்திரராஜா பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்திருந்தார்.கண்காட்சியின் இறுதி நாள் நிகழ்வை வடமாகாணக் கல்வியமைச்சின் செயலாளர் ஆர். இரவீந்திரன் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.
குறித்த கண்காட்சியில் பகவான் ஸ்ரீ சத்திய சாயி பாபா அறிமுகப்படுத்திய மனித மேம்பாட்டுக் கல்வி முறை பற்றிய காட்சிகளும் அது தொடர்பான விளக்கங்களும் இடம்பெற்றிருந்தன. அத்துடன் அண்மைக் காலமாக எமது சமூதாயத்தில் அதிகரித்து வரும் சீரழிவுகளும், அதனைக் கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளும், மனத்தைக் கட்டுப்படுத்தி வாழக்கையில் எவ்வாறு முன்னேறுவது போன்ற பல்வேறு காட்சிப்படுத்தல்களும் இடம்பெற்றிருந்தன.
குறிப்பாகப் பெற்றோர்களுக்கும் ,பிள்ளைகளுக்கும் அறிவுரை சொல்லும் வகையிலான பொம்மை மற்றும் நிழற்பாவை ஆட்டமும் கண்காட்சியின் முக்கிய நிகழ்வாக இடம்பெற்றன. தொடர்ந்து மூன்று நாட்களாக இடம்பெற்ற இந்தக் கண்காட்சியைப் பெருமளவான மாணவர்களும், வடபிராந்திய சத்தியசாயி சர்வதேச நிறுவனங்களைச் சேர்ந்த அன்பர்கள், ஆர்வலர்களும் பார்வையிட்டுப் பயன் பெற்றனர்.
Related posts:
|
|