மத்திய கிழக்கில் தங்கியுள்ள இலங்கை பணியாளர்களை அழைத்துவர விரைவில் நடவடிக்கை – இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவிப்பு!

Wednesday, October 14th, 2020

மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் புரிவதற்காக சென்ற இலங்கை பிரஜைகளை நாட்டிற்கு மீளவும் அழைத்து வரும் செயற்பாடுகள் அடுத்த மாதம்முதல் மீளவும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

அத்துடன் நாட்டிலுள்ள கண்காணிப்பு முகாம்களில் காணப்படும் இட வசதிகளை கருத்திற் கொண்டு, அவர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் குறிப்பிட்டுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து சுமார் 45 ஆயிரம் பேர் நாடு திரும்புவதற்கு எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.

இதேவேளை, வெளிநாடுகளில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் 68 இலங்கை பிரஜைகள் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் மங்கள ரந்தெனிய தெரிவித்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடாக 5 இலட்சம் ரூபாவை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மங்கள ரந்தெனிய மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: