மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாண பணிகளை மிக விரைவில் நிறைவு செய்ய தீர்மானம் – நெடுஞ்சாலைகள் அமைச்சர் தெரிவிப்பு!

Thursday, October 1st, 2020

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாண பணிகள் மிக விரைவாக நிறைவு செய்வதற்கு அரசாங்கமானது தீர்மானித்துள்ளது.

கடவத்தை தொடக்கம் மீரிகம வரையான அதிவேக நெடுஞ்சாலையானது எதிர்வரும் 5 மாதங்களில் நிறைவுச் செய்யப்படவுள்ளதாக நெடுஞ்சாலைகள் அமைச்சரான ஜோஹன்ஸ்டோன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார் .

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாண பணிகள் கடந்த அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டன.

இதில் குறைபாடுகள் நிலவின ஜனாதிபதி மற்றும் பிரதமரின் அறிவுறுத்தல்களுக்கு அமைய இதன் கட்டுமாணத்தை விரைவுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் இதன் போது மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: