மத்தியதரைக் கடலில் காப்பாற்றப்பட்டவர்களில்  இலங்கையரும் அடக்கம்!

Monday, April 3rd, 2017

இலங்கையர்கள் உட்பட்ட குடியேறிகள் பலர் மத்தியதரைக் கடலில் வைத்துகாப்பாற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

480 சட்டவிரோத குடியேறிகள் உள்ளடங்கியுள்ள இரண்டு படகுகளில் இருந்து கடந்தசனிக்கிழமையன்று காப்பாற்றப்பட்டவர்களில் 4 வயது குழந்தை ஒன்றும் இருப்பதாகரொயட்டர் செய்தி வெளியிட்டுள்ளது

வட மற்றும் மத்திய ஆபிரிக்கா, இலங்கை, யேமன், உள்ளிட்ட நாடுகளில் குடியேறிகள் இந்தபடகுகளில் பயணிக்கின்றனர்.

இந்தநிலையில் லிபியாவின் சப்பிரதா நகரில் இருந்து 22 கடல்மைல் தூரத்தில் வைத்துஇவர்கள் அதிகாரிகளால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

இதன்பின்னர் அவர்கள் மீன்பிடி வள்ளங்களில் ஏற்றப்பட்ட ஒகஸ்டாவின் சோலியன்துறைமுகத்துக்கு நேற்று மாலை அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

குறித்த குடியேறிகள் முதலில் இத்தாலிக்கு செல்ல முயற்சித்துள்ள போதும் அவர்கள் இறுதிபயண இலக்கு எங்கே என்ற தகவல் வெளியாகவில்லை.

எனினும் பிரான்ஸ் அல்லது ஜெர்மனிக்கு செல்லவே தாம் திட்டமிட்டிருந்ததாக குடியேறிகளில்சிலர் தெரிவித்துள்ளனர்

Related posts: