மது வரிக் கட்டளைச் சட்டத்தினை மீறி மதுபானம் விற்பனை செய்த அறுவருக்கு அபராதம்!

Friday, August 26th, 2016

மது வரி நிலைய அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சுற்றி வளைப்பு நடவடிக்கையில் மதுவரிக் கட்டளைச் சட்டத்தினை மீறி வீட்டில் வைத்துக் கள் விற்பனை செய்த அறுவருக்குத் தலா ஆயிரம் ரூபாவை மல்லாகம் மாவட்ட மேலதிக நீதவான் ரீ. கருணாகரன்  நேற்று முன்தினம் (24)  அபராதமாக விதித்து உத்தரவிட்டுள்ளார்.

கடந்த வாரம் மதுவரி நிலைய அதிகாரிகள் சுதுமலை, பன்னாலை, புத்தூர் ஆகிய பகுதிகளில் திடீர் சுற்றி வளைப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர். இதன் போது ஏழு சீவல் தொழிலாளர்களுக்கு எதிராக வீட்டில் வைத்துக் கள் விற்ற குற்றச் சாட்டில் மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. மல்லாகம் மது  வரி நிலைய அதிகாரிகளால் தாக்கல் செய்யப்பட்ட ஏழு வழக்குகளில் ஆறு வழக்குகள் நேற்று முன்தினம் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போதே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.

Related posts: