மது போதையில் வாகனம் செலுத்திய இரு ஆசிரியர்கள் மானிப்பாயில் கைது !

Friday, July 15th, 2016

மது போதையில் வாகனம் செலுத்திய இரு ஆசிரியர்களை நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை(12) இரவு கைது செய்துள்ளதாக மானிப்பாய்ப் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று முன்தினம் இரவு மது விருந்தொன்றிற்குச் சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது காக்கைதீவுப் பகுதியில் ஒருவரும், மானிப்பாய் மெமோறியல் பாடசாலைக்கு அருகில் வைத்து மற்றையவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான இரு ஆசிரியர்களும் யாழ். நகரிலுள்ள பிரபல பாடசாலையொன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

கைதான இருவருக்கும் எதிராக மல்லாகம் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related posts: