மதுவரி உத்தியோகத்தர் கஞ்சாவுடன் கைது!

crime-arrest-handcuffs-jpg_0 Tuesday, November 14th, 2017

மட்டக்களப்பு – கல்லடியில் உள்ள மதுவரித் திணைக்களத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் ஒருவர், கஞ்சா வைத்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் நேற்று முன்தழனம் காத்தான்குடி நகரில் வைத்துக் கைது செய்யப்பட்டார் என, மட்டக்களப்பு குற்றத் தடுப்புப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மதுவரித் திணைக்கள உத்தியோகத்தரிடமிருந்து, விற்பனைக்காக கொண்டு சென்ற 500 கிராமுக்கும் கூடுதலான கஞ்சா மீட்கப்பட்டது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மதுவரித் திணைக்கள உத்தியோகத்தர், கஞ்சா விற்பனையில் ஈடுபடுகின்றார் எனக் கிடைத்த ரகசியத் தகவலை அடுத்தே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட மதுவரித் திணைக்கள உத்தியோகத்தரை, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.


32861036_1770611652977914_7456190262398681088_n

சாகும்வரை பதவியில் இருக்கிறமாதிரி  ஆபத்துவராமல் பாருங்க சாமி… நான் எப்பவும் உங்களுக்கு துணையிருப்பன் சாமி…..!