மதுபானங்களின் விலை உயர்வு: சட்டவிரோத மதுபான உற்பத்தி அதிகரிப்பு!
Monday, December 12th, 2016மதுபானங்களின் விலைகள் உயர்த்தப்பட்டதனைத் தொடர்ந்து சட்டவிரோத உற்பத்தி அதிகரித்துள்ளதாக கலால் திணைக்கள உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இந்த தகவலை வெளியிட்டார். அவர் மேலும் கூறுகையில்… மேல் மாகாணத்தில் மட்டும் 30 பாரியளவிலான சட்டவிரோத கசிப்பு மதுபான உற்பத்திச்சாலைகள் கடந்த இரண்டு வாரங்களில் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தினால் மதுபானங்களின் விலைகள் உயர்த்தப்பட்டதனைத் தொடர்ந்து சட்டவிரோத மதுபான வகைகளுக்கு பாரிய கிராக்கி நிலவி வருகின்றது.
பாரியளவில் சட்டவிரோத மதுபான வகைகளை கொழும்பிற்கு அனுப்பி வைக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சட்டவிரோத மதுபான உற்பத்தி மற்றும் விநியோகத்தை தடுக்க கலால் திணைக்களம் விசேட நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
சர்வதேச விமான நிறுவனங்கள் சில இலங்கையுடன் புதிய விமான சேவைகளை முன்னெடுக்க நடவடிக்கை - சுற்றுலாத்துற...
நாட்டின் பெரும்பாலா பிரதேசங்களில் வரட்சியான வானிலை தொடர்ந்தும் நிலவும் - வளிமண்டலவியல் திணைக்களம் எ...
மின்சார கட்டணம், நீர் கட்டணங்களை உள்ளூர் முகவர்கள், தபாலகங்களில் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு அவச...
|
|