மண்ணெண்ணெய் விற்பனையால் அரசுக்கு 540 கோடி ரூபா நட்டம் !

Sunday, March 25th, 2018

கடந்த வருடம் மண்ணெண்ணெய் பாவனை சடுதியாக அதிகரித்துள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கமைய கடந்த வருடம் ஒரு லட்சத்து 98 ஆயிரத்து 90 லீற்றர் மண்ணெண்ணெய் பயன்படுத்தப் பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

பொது மக்களுக்கு நிவாரண அடிப்படையில் மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்று 44 ரூபாவிற்கு தற்போது வழங்கப்படுவதுடன் லீற்றர் ஒன்றினால் கனிய எண்ணெய் கூட்டுத் தாபனத்திற்கு 48 ரூபா நட்டம் ஏற்படுகின்றது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது இதற்கமைய கடந்த வருடம் மாத்திரம் மண்ணெண்ணெய் விற்பனையால் அரசுக்கு 540 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது

மானிய அடிப்படையில் வழங்கப்படும் மண்ணெண்ணெய் பஸ் மற்றும் பாரவூர்தி ஆகியவற்றிற்கு விற்பனை செய்யப்படும் வர்த்தகம் தொடர்பில் கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: