மண்ணெண்ணெய் அருந்திய குழந்தைக்கு சிகிச்சை!

Monday, August 29th, 2016

அம்பாறை, விநாயகபுரத்தைச் சேர்ந்த ஒன்றரை வயதுக் குழந்தையொன்று தவறுதலாக மண்ணெண்ணெய் அருந்திய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சனிக்கிழமை (27) மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இக்குழந்தை திருக்கோவில் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர்  மேலதிக சிகிச்சைக்காக அம்பாறை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது.

இக்குழந்தையின் வீட்டுக்கு வந்த சிறியதாய், குழந்தையை அழைத்துக்கொண்டு அவரது வீட்டுக்குச் சென்று விளையாட விட்டுள்ளார். இதன் பின்னர், அவர் தனது வேலையின் நிமித்தம் வெளியில் சென்றபோது, குழந்தை மண்ணெண்ணெயை தவறுலதாக அருந்தியுள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

Related posts: