மண்டைதீவில் கடலட்டை பிடித்தவர்கள் கைது!

அனுமதிப்பத்திரமின்றி மண்டைதீவு கடலில் கடலட்டை பிடித்த 15 மீனவர்களை, நேற்று செவ்வாய்க்கிழமை (19) புங்குடுதீவு கடற்படையினர் கைதுசெய்துள்ளதாக யாழ்ப்பாணம் கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்கள உதவிப் பணிப்பாளர் பாலசுப்பிரமணியம் றமேஸ்கண்ணா தெரிவித்துள்ளார்.
அவர்களிடமிருந்து 104 கடலட்டைகள், சுழியோடுவதற்கு பயன்படுத்தப்படும் முகமூடிகள், சப்பாத்துக்கள் மற்றும் படகு என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. கைதானவர்கள், பாசையூர் மற்றும் குருநகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
Related posts:
2016 ஆம் ஆண்டுக்கான சிறந்த விவசாயிகளைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!
இளைஞர் மீது சரமாரியாக வாள்வெட்டு – மீசாலையில் சம்பவம்!
ஊரடங்கு சட்டம் நீக்கம்: நீண்ட நாள்களுக்கு பின்னர் இயல்பு நிலைக்கு திரும்பியது யாழ்ப்பாணம் – நாளாந்த ...
|
|