மண்டைக்கல்லாறு பாலத்தினூடான போக்குவரத்து தடைப்படும் அபாயம்!

Thursday, November 24th, 2016

கிளிநொச்சி – பூநகரி பிரதெசத்தில் உள்ள மண்டைக்கல்லாறு பாலத்தின் ஊடான போக்குவரத்து தொடர் மழையால் பாதிக்கப்படலாம் என பிரதேச மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். தற்போது பெய்து வரும் தொடர்மழை காரணமாகக் கிளிநொச்சி மாவட்டத்தின் பல பிரதேசங்கள் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளன.

பூநகரி மண்டைக்கல்லாறு பாலத்தின் ஊடான போக்குவரத்தும் பாதிப்படையும் நிலை காணப்படுகிறது. தற்போது குறித்த பாலத்தின் மேலாக ஒரு அடி உயரத்துக்கு மேல் வெள்ளம் பாய்கின்றது. இந்த பாலத்தினூடாக கனரக வாகனங்கள் பயணிப்பதை தவிர்க்குமாறு பூநகரி பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். நீர் மட்டம் அதிகமானால் போக்குவரத்து நிறுத்தப்பட்டு படகுச்சேவை ஆரம்பிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

625.0.560.320.160.600.053.800.668.160.90

Related posts: