மண்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள்!

மண்சரிவினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ள கேகாலை மாவட்ட மக்களுக்கு காணிகள் மற்றும் வீடுகள் வழங்கும் திட்டத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இறுதி அனுமதி கிடைத்துள்ளது.
அனர்த்தங்களை எதிர்கொண்ட கேகாலை மாவட்ட மக்களை மீள் குடியேற்றம் செய்வது சம்பந்தமாக இடம்பெற்ற விஷேட கலந்துரையாடலின் பேது ஜனாதிபதி இதற்கு அனுமதி வழங்கியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.
மீள் குடியேற்றம் செய்வதற்கு தகுதியான இடம் மற்றும் தேவையான அளவுகள் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்காக அரச மற்றும் தனியார் பெருந்தோட்ட காணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
பெருந்தோட்ட தொழிலுக்கு பாதிப்புக்கள் ஏற்படாத விதமாக மற்றும் குடியேற்றத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை வழங்க கூடிய விதமான காணிகளை சுவீகரிக்குமாறு ஜனாதிபதி இதன்போது ஆலோசனை வழங்கியுள்ளார்.
Related posts:
அடிப்படைச் சிங்களக் கற்கை நெறிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!
உரம் விநியோகிக்க விரிவான நடவடிக்கை - தேசிய உர செயலகம்!
நெல் கொள்வனவு நடவடிக்கை ஆரம்பம் - சபையின் உப தலைவர் துமிந்த பிரியதர்ஷன தெரிவிப்பு!
|
|