மட்டக்களப்பு- காங்கேசன்துறை இடையே இ.போ.ச.பேருந்து சேவை ஆரம்பம்!

Tuesday, August 23rd, 2016

மட்டக்களப்பில் இருந்து காங்கேசன்துறைக்கான இரவுநேர பேருந்து சேவை நேற்று(22) இரவு 8.20 மணிக்கு மட்டக்களப்பு பேருந்து தரிப்பு நிலையத்தில் இருந்து ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த இரவு நேர நெடுந்தூர பேருந்து சேவையானது [ 412 கி மீ] தூரம் கொண்ட இந்த பேருந்து சேவையை பல காலங்களுக்கு பின் மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் உதயகுமார் ஆரம்பித்து வைத்தார்.

மட்டக்களப்பு, யாழ் மக்களினதும் ,இசை நடனக் கல்லூரி, கல்வியயல் கல்லூரி மாணவர்களின் நலன் கருதி இந்த இரவு நேர பேருந்து சேவை ஆரம்பித்து வைக்கப்ப பட்டுள்ளது . இதன் படி மட்டக்களப்பில் இருந்து இரவு 8.20 க்கும் காங்கேசன்துறை பேருந்து தரிப்பு நிலையத்தில் இருந்து இரவு 9.30 க்கும் தனது சேவையை தொடர்கின்றது.

Related posts:


கொரோனா பரவல் மத்தியில் டெங்கு நோயின் பரவலும் அதிகரிப்பு - தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்...
மாகாணங்களுக்கு இடையில் பேருந்து சேவைகள் இன்று முன்னெடுப்பு – நாளைமுதல் தொடருந்து சேவைகளும் வழமைக்கு ...
படையினரின் சேவைகளை இன்று சிலர் புறக்கணித்து செயற்படுகின்றனர் - இராணுவத் தளபதி குற்றச்சாட்டு!