மட்டக்களப்பில் கடந்த 24 மணித்தியாலத்தில் 3 கோவிட் தொற்றாளர்கள் உயிரிழப்பு !

Wednesday, June 9th, 2021

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன், 186 பேருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இன்றையதினம் கருத்து தெரிவிக்கும் போதே மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் –

கோவிட் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த காங்கேயன்ஓடை பிரதேசத்தை சேர்ந்த ஒருவரும், கோறளைப்பற்று மத்தியைச் சேர்ந்த இருவர் உட்பட 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் கீழ் உள்ள சுகதார வைத்திய அதிகாரி பிரிவுகளான மட்டக்களப்பில் 33 பேரும், களுவாஞ்சிகுடியில் 14 பேரும், வாழைச்சேனையில் 5 பேரும், காத்தான்குடியில் 20 பேரும், கோறளைப்பற்று மத்தியில் 21 பேரும், ஓட்டமாவடியில் 31 பேரும், செங்கலடியில் ஒருவரும், ஏறாவூரில் 27 பேரும், பட்டிருப்பில் 16 பேரும், வவுணதீவில் 3 பேரும், ஆரையம்பதியில் 3 பேரும், கிரான் 3 பேரும், பொலிஸ் உத்தியோகத்தர் 3 பேரும், சிறைச்சாலையில் 7 பேரும் என 186 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து செல்கின்றது. எனவே பொது மக்கள் பயணத் தடையை மீறி வீட்டில் இருந்து தேவையின்றி வெளியே வர வேண்டாம் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


கொரோனா தாக்கத்தின் எதிரொலி : இலங்கை களஞ்சியங்களில் நிரம்பி வழியுகிறது எரிபொருள்கள் – பெற்றோலியக் கூ...
தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகளின் போக்குவரத்து அனுமதிப்பத்திரம...
இஸ்ரேல் - ஹமாஸ் போர் - காசாவிற்கு மேலதிக மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கான இணக்கப்பாட்டை எட்டியுள்ளத...