மக்கள் வங்கியின் நவீனமயப்படுத்தல் தொடர்பான கொள்முதல் குறித்து கோப் குழு அறிக்கை கோருகிறது.

மக்கள் வங்கியின் நவீனமயப்படுத்தல் தொடர்பான கொள்முத சிக்கல் குறித்து பொருட்டு மேற்கொள்ளப்பட்ட கொள்முதல் நடவடிக்கை தொடர்பில் முழுமையான அறிக்கையினை கோப் குழு கோரியுள்ளது.
அரச கணக்காய்வாளர் திணைக்களத்திடம் குறித்த அறிக்கை கோப் குழுவினால் நேற்று(22) கோரப்பட்டுள்ளது.
மக்கள் வங்கியின் தலைவர் உள்ளிட்ட பணிப்பாளர் சபையினர் நேற்று கோப் குழுவை சந்தித்த போது இந்த சம்பவம் குறித்த அனைத்து கோவைகளையும் கோப் குழு பெற்றுத்தருமாறு கோரியுள்ளது.
அத்துடன் இந்த சம்பவம் தொடர்பாக அமைச்சு மட்டத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு இரண்டு வாரங்களுக்குள் அதன் அறிக்கையினை சமர்ப்பிக்குமாறும் கோப் குழு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
Related posts:
இத்தாலிய பிரதி வெளிவிவகார அமைச்சர் இலங்கை விஜயம்.!
சிவாஜிலிங்கம் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்காக அழைப்பு !
நெல் கொள்வனவை நிறுத்தியது கொடிகாமம் கூட்டுறவுச் சங்கம்!
|
|