மக்கள் மீது எரிபொருட்களுக்கான வரி திணிக்கப்படமாட்டாது!

Tamil_Daily_News_5439220666886 Thursday, July 14th, 2016

எரிபொருள் வரிச் சுமை மக்கள் மீது சுமத்தப்படாது என பெற்றோலிய வள அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

பெற்றோலிய வள அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்ற நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியிருந்தார். தொடர்ந்து அவர் கருத்து தெரிவிக்கையில்,

எரிபொருளுக்காக அறவீடு செய்யப்படும் வரிகள் மக்கள் மீது சுமத்த இடமளிக்கப்படாது. தற்போது சில வகை எரிபொருட்களுக்கு வரி அறவீடு செய்யப்படுகின்றது. எனினும் இந்த வரித் தொகையினை இலங்கை பெற்றோலியக் வளக்கூட்டுத்தாபனமும் இந்தியன் ஒயில் நிறுவனமும் ஏற்றுக்கொள்ளும். வரி அறவீடு செய்யப்படுவதனால் லாபத்தில் ஒரு பகுதி குறையுமே தவிர அந்த சுமை மக்கள் மீது திணிக்கப்படாது.

பெற்றோலிய வளக் கூட்டுத்தாபனம் கடந்த நான்கு மாதங்களில் வரிச் செலுத்தியதன் பின்னர் 365 பில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளது.

பெற்றோலிய வளக் கூட்டுத்தாபனம் 665 பில்லியன் ரூபா கடன் ஒன்றினை செலுத்தி வருகின்றது. இதேபோன்று ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம், முப்படைகள் மற்றும் இலங்கை மின்சார சபை ஆகியன பெற்றோலிய வளக் கூட்டுதாபனத்திற்கு கடன் செலுத்த வேண்டியுள்ளது என அமைச்சர் சந்திம வீரக்கொடி சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கதாகும்.


அம்மன் அழைத்ததாக கூறி அறுபதடி கிணற்றுக்குள் இறங்கிய பூசாரி பரிதாப பலி !
வேலைத்தளங்களில் பால்நிலை சமத்துவத்தைப் பேண யாழ்.மாவட்ட செயலகத்தால் தொடர் கண்காணிப்பு!
பெண்கள், சிறுவரை பாதுகாப்பதற்காக அலைபேசிச் செயலி அறிமுகப்படுத்த பொலிஸார் நடவடிக்கை!
பொறுப்புக்கூறலை மையைமாக கொண்டு நல்லிணக்கம் - பிரதமர் !
ஐ.நா. மனித உரிமை பேரவை சிபாரிசுகளை ஒருங்கிணைக்க அமைச்சரவை குழு!