மக்கள் சோலை வரி செலுத்தும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது – வவுனியா நகரசபை செயலாளர் தெரிவிப்பு!
Saturday, December 17th, 2016
வவுனியா மாவட்ட நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் சோலை வரி, வருமான வரி ஆகியவற்றை அறவிடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருவதாக வவுனியா நகரசபை செயலாளர் தயாபரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:
வவுனியா நகரசபை எல்லைக்குள் வசிக்கும் பொதுமக்கள் தாமாக முன்வந்து சோலை வரி, வருமான வரி ஆகியவற்றைச் செலுத்த முன்வர வேண்டும் இதேவேளை வவுனியா நகரசபைக்கு சுமார் 40 மில்லியன் ரூபாய்க்கு மேல் சோலை வரிப்பணம் மற்றும் வருமான வரி நிலுவையிலுள்ளது. இப்பணத்தினை செலுத்தும் பட்சத்தில் வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதியை மேலும் அழகு படுத்துவதோடு மக்கள் சார் நலத்திட்டங்களையும் விரிவுபடுத்த முடியம். எனவே இதனைக் கருத்தில் கொண்டு நகரசபை அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் நிலுவையில் உள்ள ரிகளையும் மற்றும் சிகழ்கால வரியையும் அறவீடு செய்து வருகின்றனர். இந்த நடவடிக்கைக்கு மக்கள் பூரண ஒத்துழைப்ப தர வேண்டும். மேலும் சோலை வரியைச் செலுத்தும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதுடன் வரியைச் செலுத்த தவறும் பட்சத்தில் அவர்களுக்கு எதிராக சட்ட சடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|