மகோகனி மரத்தை வெட்ட முயற்சித்த 4 பேர் கைது!

arrest-slk.polce_21 Monday, March 20th, 2017

சுமார் 62 வருடங்களுக்கு முன்னர் சேகுவாரால் நடப்பட்டதாகக் கூறப்படும் மகோகனி மரம் உட்பட பெறுமதியான மரங்களை இரகசியமான முறையில் வெட்டத் திட்டமிட்ட நால்வரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மொரகஹஹேன பொலிஸ் பிரிவில் யாஹாலகெலேவத்தைப் பிரதேசத்தில் மரங்களை வெட்டத் திட்டமிட்டிருந்ததுடன், சில மரங்கள் வெட்டப்பட்டும் உள்ளன. சேகுவாரால் நடப்பட்டதுக்கு அருகில் உள்ள பெருமதியான மரங்கள் சிலவற்றை சந்தேக நபர்கள் வெட்டி வீழ்த்தியுள்ளனர். சேகுவாரா நட்ட மரத்தை வெட்டுவதற்கு முன்னர், அவர்களைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். வருடந்தோறும் ஓகஸ்ட் 8 ஆம் திகதி இலங்கையில் உள்ள கியூபா தூதுவர் அந்த மரத்திற்கு அருகில் சென்று மலர் வைத்து சேகுவாராவை நினைவு கூர்வது வழக்கம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


32861036_1770611652977914_7456190262398681088_n

சாகும்வரை பதவியில் இருக்கிறமாதிரி  ஆபத்துவராமல் பாருங்க சாமி… நான் எப்பவும் உங்களுக்கு துணையிருப்பன் சாமி…..!