மகா சிவராத்திரி ஏற்பாடு கேதீஸ்வரத்தில் மும்முரம் – பொலித்தீன் பயன்பாட்டுக்குத் தடை!

Tuesday, February 12th, 2019

அடுத்த மாதம் மகா சிவராத்திரி தின விரதம் கடைப்பிடிக்கப்படும் நிலையில் வரலாற்றுச் சிறப்பு மிக்கதும் பாடல்பெற்ற திருத்தலங்களில் ஒன்றானதுமான மன்னார் திருக்கேதீஸ்வரம் திருத்தலத்தில் சிவராத்திரியை முன்னிட்டுச் சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பக்தர்களின் வசதி கருதி சிறப்புத் தொடருந்து சேவை மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வீதி ஒழுங்குகளைச் சீர்செய்தல், பக்தர்களுக்கான தங்குமிட வசதிகள், பக்தர்களுக்கான குடிதண்ணீர் வசதிகள் போன்ற விடயங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டுள்ளன.

அதிகளவான பக்தர்கள் அன்றைய தினம் வருவார்கள் என்று எதிர்பார்ப்பதால் அதிகளவு பொலிஸாரைக் கடமையில் அமர்த்த வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஆலய வளாகத்துக்குள் எந்தக் காரணம் கொண்டும் பொலித்தீன் பாவனை அனுமதிக்கப்பட மாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


யாழ்ப்பாணம் பகவான் ஸ்ரீ சத்தியசேவா நிலையத்தில் சித்திரா  பெளர்ணமியை முன்னிட்டு  நகர சங்கீர்த்தனமும் ...
மீனவர்களைத் தடுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டை நிராகரித்தது கடற்றொழில் திணைக்களம்!
கணித, விஞ்ஞான பாடங்களுக்கான ஆசிரியர் வெற்றிடங்களுக்கு ஜீன் 6ஆம் திகதி நியமனம்!
கிளிநொச்சியில் வாழ்வாதாரத் திட்டத்திற்கு 300 பயனாளிகள் தெரிவு!
நாய்களின் தொல்லையை கட்டப்படுத்துமாறு கோரிக்கை!