மகஸின் சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டம்!
Monday, October 9th, 2017தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், மகஸின் சிறைச்சாலையில் உள்ள அரசியல் கைதிகளும் நாளை ஒரு நாள் உண்ணாவிரத போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருக்கும் இவர்களுக்கு ஆதரவாக பல்வேறு தரப்பினரும் பல போராட்டங்களை நாளை முன்னெடுக்கவுள்ளனர்.அந்த வகையில், மகஸின் சிறைச்சாலையில் உள்ள அரசியல் கைதிகள் 70 பேர் நாளை உண்ணாவிரத போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளனர்.
அரசியல் கைதிகளை நிபந்தனைகளின்றி விடுதலை செய்ய வலியுறுத்தி தொடர்ந்தும் தாம் உணவு தவிர்ப்பு போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொண்டுள்ளதுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ் அரசியல் கட்சிகள் தமது விடுதலையை வலியுறுத்தி உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அரசியல் கைதிகள் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.
Related posts:
|
|