மகளிர் கமக்கார அமைப்பின் ஊடாக குறைந்த வட்டியில் கடன்!

கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் ஏற்பாட்டில் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த மகளிர் கமக்கார அமைப்பினருக்கான இருநாள் செயலமர்வு வவுனியா நகர மண்டபத்தில் இடம்பெற்றது.
வவுனியா கமநல அபிவிருத்தித் திணைக்கள உதவி ஆணையாளர் விஜயகுமார் தலைமையில் இடம்பெற்ற இச் செயலமர்வில் ஓய்வுபெற்ற மேலதிக அரசாங்க அதிபரும் சமுர்த்தி கணக்கு முறையை இயற்றியவருமான கருணாரத்தின விரிவுரையாளராக இச்செயலமர்வினை நடத்தியிருந்தார்.
இதன்போது விரிவுரையாளரினால் நுண்நிதி நிறுவனங்களின் கடன் மற்றும் வட்டி முறை தொடர்பாகவும் அதனால் ஏற்படும் விளைவுகள் தொடர்பாகவும் அது தொடர்பான வழிப்புணர்வு பெண்கள் மத்தியில் ஏன் ஏற்பட வேண்டும் என்பது தொடர்பாகவும் இனிவரும் காலங்களில் மகளிர் கமக்கார அமைப்பின் ஊடாக குறைந்த வட்டி வீதத்தின் மூலமாக கடன் வழங்கும் முறைமைகள் தொடர்பாக விரிவுரையாற்றியிருந்தார்.
இச் செயலமர்வில் வவுனியா, மன்னார், முல்லைத்தீவைச் சேர்ந்த 60 மகளிர் கமக்கார அமைப்பைச் சேர்ந்தவர்கள், கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கமநல அபிவிருத்தி வங்கி உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.
Related posts:
|
|