மகப்பேறு வைத்தியர்கள் பரிந்துரை – எதிர்வரும் புதன்கிழமைமுதல் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தடுப்பூசி வழங்க ஏற்பாடு என சுகாதார அமைச்சு அறிவிப்பு!

Monday, June 7th, 2021

எதிர்வரும் புதன்கிழமைமுதல் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தடுப்பூசி செலுத்த சுகாதார அமைச்சு முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ள சுகாதார அமைச்சு மகப்பேறு வைத்தியர்களின் வேண்டுகோளைத் தொடர்ந்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

அதன்படி, ஒரு மாதத்திற்குள் கர்ப்பிணித் தாய்மார்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதை நோக்கமாக கொண்டு நடவடிக்கைகள் முன்னெடக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அந்தவகையில் கொழும்பில் உள்ள பெண்களுக்கான கேஸில் ஸ்ட்ரீட் வைத்தியசாலை மற்றும் பிலியந்தலை எம்.ஓ.எச் அலுவலகத்திலும் தடுப்பூசி நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

சுகாதார அமைச்சு வெளியிட்ட தரவுகளின் அடிப்படையில் இதுவரை நாட்டில் கொரோனா தொற்றினால் 8 கர்ப்பிணித் தாய்மார்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: