மகன் எங்கோ அதற்குத்தான் எனது ஆதரவு – முரளியின் தந்தை!

Wednesday, July 27th, 2016

சின்னச்சாமி முத்தையா என்பது கண்டியில் நன்கு அறியப்பட்ட ஓரு பெயர்,லக்கி லாண்ட் பிஸ்கட் நிறுவனத்தின் நிர்வாகிகளில் ஒருவரான இவர் இலங்கையின் சுழற்பந்து ஜாம்பவான் முத்தையா முரளீதரனின் தந்தை.

நேற்று கண்டியில் ஆஸ்திரேலிய இலங்கை அணிகள் மத்தியில் ஆரம்பமாகவுள்ள முதலாவது டெஸ்ட்போட்டியை நேரில் சென்று பார்ப்பதற்கு தனக்கு நேரமில்லை என தெரிவித்துள்ளார். எனினும் 73 வயது முத்தையா தொலைக்காட்சியில் போட்டியை பார்ப்பதுடன் ஆஸ்திரேலிய அணிக்கு தனது ஆதரவையும்ஆளிக்கின்றாராம்.

இது தொடர்பில் அவர் கூறுகையில் – நான் தொலைக்காட்சியில் போட்டியை பார்ப்பேன், முன்னர் நான் இலங்கையை ஆதரித்தேன், தற்போது நான் ஆஸ்திரேலிய அணிக்கு ஆதரவு வழங்குகின்றேன் என ஊடகங்களுக்கு சிரித்தபடி அவர் தெரிவித்துள்ளார்.

நான் எனது மகனிற்கு தான் ஆதரவு வழங்குவேன் என்ற அவர் இலங்கை அணி தரவரிசைப்பட்டியலில் ஏழாவது இடத்திற்கு சரிந்துள்ளமை குறித்து கேள்வி எழுப்பியவேளை அவர் அதற்கு அரசியலே காரணம் என்கின்றார் தெரிவித்துள்ளார்.

இலங்கை அணி அரசியல் காரணமாகவே இந்த நிலையில் காணப்படுகின்றது, மகேல, சங்கவின் வெற்றிடமும் ஒரு காரணம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். தனது மகன் 44 வயதிலும் துல்லியமாக பந்துவீசுவது குறித்து பெருமிதம் வெளியிட்ட அவர் ஒருதடவை முரளிக்கு பந்துவிச்சில் ஒரு போட்டி வைத்தார்கள்.  அதாவது கிளாஸ் ஒன்றின் கரையோரம் நாணயக்குற்றியை வைப்பார்கள் அதை விக்கற்றின் மேல் வைத்து நாணயக்கற்றியை வீழ்த்தவேண்டும் என நிபந்தனை அவர் நாணயக்குற்றி மாத்திரமே கீழே விழும் தனது திறமையை நிரூபித்தது இன்றும் எனது மனதில் உள்ளது என்றார் .

Related posts: