மருத்துவ பரிசோதனைகளுக்கு வற் வரியில் சலுகை - வர்த்தமானி இன்று வெளியாகும்!

மருத்துவப் பரிசோதனைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த வற் வரியில் சலுகை வழங்கும் வகையிலான விசேட வர்த்தமானி இன்று வெளியிடப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்
கொலன்னாவையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்த போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.இது தொடர்பில் மேலும் அவர் குறிப்பிடுகையில்
நாட்டு மக்களுக்கு பல்வேறு நிவாரணங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. இதன்படி இது தொடர்பில் கடந்த அமைச்சரவையின் போது பேசியிருந்தோம்
மேலும் மத்திய தர வர்க்கத்தினரின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு ஏற்ற நடவடிக்கைகளை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளோம்இதன்பிரகாரம் சுகாதாரப் பரிசோதனைக்காக விதிக்கப்பட்டிருந்த வற்வரியில் திருத்தம் செய்து சலுகை வழங்க தீர்மானித்துள்ளோம்.இதன்படி அதற்கான வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்படவுள்ளது. மக்களின் நன்மை கருதியே பல்வேறு சலுகைகளை வழங்க முடிவு செய்தோம் என்றார்
Related posts:
|
|