“ப்ளூ வேல்” வெளிவந்த திடுக்கிடும் தகவல்!

blue-whale_06082 Wednesday, September 6th, 2017

தற்போது உலகத்தையே உலுக்கிக் கொண்டிருக்கும் விளையாட்டு “ப்ளூ வேல்”, ரஷ்யாவில் அறிமுகமான இந்த விளையாட்டு உலக நாடுகளில் பல இளைஞர்களின் உயிரை எடுத்துவிட்டது.

கடந்த சில நாட்களாக சிறுவர்கள் மத்தியில் இந்த விளையாட்டு கால் பதித்துள்ள நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ப்ளூ வேல் விளையாட்டின் பின்னணியிலிருந்ததாக சந்தேகிக்கப்படும் சிறுமி ஒருவர் கைது செய்யப்பட்டார்

அதனைத் தொடர்ந்து அவரிடம் மேற்கொள்ளப்பட்ட தொடர் விசாரணைகளின் மூலம் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளன.தற்போதைய நிலவரப்படி 5,000ற்கும் மேற்பட்டோர் ‘ப்ளூ வேல்’ நிர்வகர்களாக (அட்மினாக) செயல்படுகின்றனர் என கூறியுள்ளார்.நிர்ணயிக்கப்பட்ட 50 நாட்களில் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்பதே இதன் இறுதி முடிவு. ஆனால் அவ்வாறு தற்கொலை செய்ய தயங்கியவர்களே இந்த அட்மின்கள்.இவர்கள் தற்கொலைக்கு பயந்து கெஞ்சி அட்மினாக செயல்படுகிறேன் என்று ஒப்புக்கொண்டுள்ளனர்.இந்த தகவல் அனைத்தும், தென்கிழக்கு ரஷ்யாவில் உள்ள கபாராவ்ஸ்க் ராய் என்ற பகுதியில் கைதான 17 வயது சிறுமி அளித்ததாகும். இவர் “death group administrator” என்ற குழுவின் மூலம் பலரை கவர்ந்துள்ளார் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.மேலும் இது தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்தும் தீவிரமாக இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


நோர்வேயின் பாய்மரக் கப்பல்ஒரு அருங்காட்சியகம் - கப்பலின் கப்டன் !
புத்தளம் மாவட்ட மீன்வளத்துறை திணைக்களத்தின் அனைத்து அதிகாரிகளும் இடமாற்றம்!
மாலை வகுப்புக்குச் செல்லும் மாணவர்களை பேருந்தில் ஏற்றுங்கள் - விசுவமடு பெற்றோர் கோரிக்கை!
யாழ் மாவட்டத்தில் கோவா அறுவடை!
நெல் கொள்வனவை நிறுத்தியது கொடிகாமம் கூட்டுறவுச் சங்கம்!