போலி வைத்தியர் மாட்டினார்!

Saturday, May 14th, 2016

சத்திரசிகிச்சை வைத்திய நிபுணர் என்று கூறி, நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களிடம் இலட்சக்கணக்கான பணத்தை மோசடி செய்தத நபர் ஒருவரை கட்டுநாயக்கா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

திவுலபிட்டிய, பலகல்லையைச் சேர்ந்த மேற்படி நபர் இரு பெயர்களில் இருந்தவாறே, மேற்கண்டவாறான மோசடிகளில் ஈடுபட்டுள்ளார் என்று விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

கொழும்பு தேசிய வைத்தியசாலை, நீர்கொழும்பு வைத்தியசாலை ஆகியவற்றில் சேவையாற்றி வருவதாகக் கூறியே மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Related posts: