போலி மருந்து விற்றவருக்கு நீதிமன்றின் தீர்ப்பு

Wednesday, December 13th, 2017

திருகோணமலையில் போலி மருந்துகளை விற்ற மருந்தக உரிமையாளருக்கு தண்டப்பணும் செலுத்துமாறும் பொத மக்களிடம் பகிரங்க மன்னிப்புக்கோருமாறும் திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையினால் வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரம் இல்லாதமை மற்றம் காலவாதியான ஆங்கில மருந்து வகைகளை விற்ப்பனைக்காக வைத்திருந்தமை ஆகிய இரு குற்றங்களுக்காக திருகோணமலை பிரதான நீதிவான் எம்.ஏச்.எம் ஹம்ஸா இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

தண்டம் பணம் செலுத்தத் தவறினால் கடூளியச் சிறைத்தண்டனை வழங்கப்படும் எனவும் தினசரிப்பத்திரிகை யொன்றில் முதற்பக்க செய்தியாகச் பொதுமக்களிடம் பொதுமன்னிப்புக்கோர வேண்டும் எனவும் அதனையடத்துப்பிரசுரிக்கப்பட்ட பத்திரிக்கைப்பிரதியை நீதிமன்றத்துக்குச்சமர்ப்பிக்குமாறும் நிதிமன்றால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டள்ளது.

Related posts: