போலி நாணயத் தாள்கள்களுடன் ஒருவர் கைது!

download (4) Friday, April 13th, 2018

45 போலி ஆயிரம் ரூபாய் நாணயத் தாள்களுடன் வவுனியாவில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா புதிய பஸ் தரிப்பு நிலையத்திற்கு அருகில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா பொலிஸ் பிரிவை சேர்ந்த குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு கிடைத்த தகவல்களுக்கு அமைவாக யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியாவுக்கு சென்று கொண்டிருந்த பஸ் ஒன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட வேளையில் இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் அலவ பிரதேசத்தைச் சேர்ந்தவர். இவரை நேற்று வவுனியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.