போலி நாணயத் தாளுடன் மானிப்பாயில் ஒருவர் கைது

Sunday, December 10th, 2017

போலி ரூபா தாள்களை வைத்திருந்த நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்தனர். இச் சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றது.

மானிப்பாய் வாசியான 31 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டவராவார். இவரிடமிருந்து 500 ரூபா போலி நாணயத் தாள்கள் ஒன்பதை பொலிஸார் பறிமுதல் செய்தனர்.

தமக்கு கிடைத்த அநாமதேயத் தகவலின் அடிப்படையிலேயே சந்தேக நபரைத் தாம் கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட நபர் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் நேற்று ஆயர்படுத்தப்பட்ட பின் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

Related posts: