போரினால் பாதிக்கப்பட்ட இருவருக்கு மருத்துவ உதவிகள் வழங்கிய  வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கம் 

Friday, May 20th, 2016

கடந்த கால போரின் போது தனது ஒரு காலினை இழந்து இருப்பதற்கு ஒழுங்கான வீடு இன்றி  அவதியுற்று வந்த கிளிநொச்சி மாவட்டம் இரணைமடு பாரதிபுரத்தைச் சேர்ந்த சந்தானம் சசிக்குமார் என்பவருக்குப்  புலம்பெயர் உறவான லண்டனைச் சேர்ந்த தி.லக்சனா, நந்தனா ஆகியோரின் பிறந்த நாளினை முன்னிட்டு அவரது குடும்பத்தவரால் மருத்துவ உதவி வழங்கப்பட்டுள்ளது.

வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்திடம் விடுத்த கோரிக்கைக்கு அமைய நேற்று வியாழக்கிழமை(19-05-2016) அவரது இல்லத்தில் வைத்து சுமார் ஐந்தாயிரம் ரூபா பெறுமதியான காற்றுப் படுக்கை, சக்கரநாற்காலி படுக்கை புண்ணுக்குத் தேவையான மருத்துவப் பொருட்கள் மற்றும் அவரது பிள்ளையின் கல்வி நடவடிக்கையினை ஊக்குவிக்கும் முகமாக துவிச்சக்கர வண்டி என்பன கையளிக்கப்பட்டுள்ளன .

இதே போன்று பாரிசவாதம் நோயினால் பாதிக்கப்பட்டு கைதடி ஆயுள் வேத வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் உடையார்கட்டு புதுக்குடியிருப்பைச்சேர்ந்த ஆ. அண்ணாமலை மேற்படி சங்கத்திடம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க walker ஒன்று கைதடி ஆயுள்வேத வைத்தியசாலையில் வைத்து நேற்று வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.