போதைப் பொருட்களின் வரியை அதிகரிக்க கோரி போராட்டம்!

Tuesday, September 6th, 2016

போதைப் பொருட்கள் மீதான அதிகரிக்கப்பட்ட வரியை உடனடியாக நடை முறைப்படுத்தக் கோரி நேற்று (5) சங்கானை பேருந்து தரிப்பிடத்தில் கவன ஈர்ப்பு போராட்டமும் விழிப்புணர்வும் நடைபெற்றது.

ஜனாதிபதியும் பிரதமரும் சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரம் ஏன் இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும் அங்கு வினா எழுப்பப்பட்டது. வட பிரதேச நல்லொழுக்க சம்மேளனம் ஏற்பாடு செய்த இப் போராட்டத்தில் சமூக நலன் விரும்பிகள் பெண்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்

சிகரட் வரியை அதிகரிக்க எண்ணிய சுகாதார அமைச்சருக்கு தடையாக இருப்பவர் யார்? ஜனாதிபதியும் பிரதமரும் சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கு என்ன நடந்தது போன்ற வாசகங்களை போராட்டக்காரர்கள் தாங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

1473091539_download-1

1473091559_download

Related posts: