போதனாசிரியர்களுக்கு விண்ணப்பம் கோரல்!

Thursday, December 29th, 2016

தொழில்சார் கற்கை நெறிகளை கற்பிப்பதற்கு யாழ்ப்பாண கல்வி வலயம் போதனாசிரியர்களுக்கு விண்ணப்பங்களைப் போரியுள்ளது.

மேற்படி வலய கல்வி அலுவலகத்தின் முறைசாராக் கல்விப் பிரிவின் சமூக கற்கை நிலையமானது கோப்பாய் மகா வித்தியாலயத்தில் எதிர்வரும் ஆண்டு தொழில்சார் கற்கை நெறிகளைக் கற்பிப்பதற்கான நிலையமொன்றை உருவாக்கவுள்ளது. இதன் பிரகாரம் NVQ  111 தர தேசிய தொழில் சார் தகைமை சான்றிதழை வழங்குவதற்கு ஏற்ற வகையில் போதனாசிரியர்களை தெரிவு செய்வதற்காக தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்களை வலயக் கல்வி அலுவலகம் கோரியுள்ளது.

தையல் பயிற்சி போதனாசிரியர்கள் NVQ – 4, 5,6 தராதரத்தை கொண்டோர் விண்ணப்பிக்க மடியும். கணிணி பயிற்சி நெறிக்கான NVQ 5,6 தரமுடையோர் அல்லது ஒரு வருடத்திற்கு மேற்பட்ட அரச அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தின் கொம்பியூட்டர் டிப்ளோமா சான்றிதழ் பெற்றோர் விண்ணப்பிக்க முடியுமென வலயக் கல்விப் பணிப்பாளர் கோரியுள்ளார்.

625.500.560.350.160.300.053.800.900.160.90 (1)

Related posts: