போக்குவரத்து விதிமுறை மீறல் ஒரு  இலட்சம் ரூபா அபராதம்!

Friday, January 13th, 2017

போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனம் செலுத்திய 12சாரதிகளுக்கு 1 இலட்சத்து 14ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன்  மேலும் 8 சாரதிகளை சமுதாயக சீர்திருத்த சேவையை முன்னெடுக்குமாறு மல்லாகம் நீதிமன்றினால் உத்தரவிடப்பட்டுள்ளது.

அச்சுவேலி பொலிஸ் பிரிவில் மது போதையில் சாரதி அனுமதிப்பத்திரம். வருமான வரிப்பத்திரம், காப்புறுதி பத்திரம் போன்றவை இன்றி மோட்டார் சைக்கிள் செலுத்திய இருவருக்கு தலா 12,000 ரூபா அபராதம் விதித்த மல்லாகம் நீதிமன்ற நீதிவான் ரீ.கருணாகரன் 100 மணித்தியால சமுதாய சீர்திருத்த சேவையை முன்னெடுக்குமாறு உத்தரவிட்டார்.

அதேபோல் எதுவித பத்திரமின்றி வாகனம் செலுத்திய சாரதிக்கு 18,000ரூபாவும் மதுபோதையில் சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி மோட்டார் சைக்கிள் செலுத்திய ஒருவருக்கு 9,000ரூபாவும் அபராதம் விதிக்கப்பட்டதுடன் இருவருக்கும் மணித்தியால சமுதாய சீர்திருத்த கட்டளை பிறப்பிக்கப்பட்டது.

மேலும் சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மதுபோதையில் பயங்கரமான முறையில் மோட்டார் சைக்கிள் செலுத்திய நால்வருக்கு தலா 6,000ரூபா அபராதமும் 50 மணித்தியால சீர்திருத்த கட்டளையும் எதுவித பத்திரமின்றி மதுபோதையில் வாகனம் செலுத்திய சாரதிக்கு 15,000ரூபா அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார். அதேபோல் மதுபோதையில் விதிமுறை மீறியவருக்கு 9,000ரூபா அபராதம் விதிக்கப்பட்டது. மானிப்பாயில் அபயகரமாக மதுபோதையில் மோட்டார் சைக்கிள் செலுத்திய ஒருவருக்கு 9,000ரூபா, இளவாலையில் மதுபோதையில் வாகனம் செலுத்திய ஒருவருக்கு 6,000ரூபா அபராதத்துடன் 50 மணித்தியால சமுதாய சீரிதிருத்த கட்டளை பிறப்பித்தார் நீதிவான் ரீகருணாகரன்.

courtf2ffd1

Related posts: