போக்குவரத்து நெரிசல் கட்டணம்; இறுதித்தீர்மானம் அமைச்சரிடம்!

Friday, June 3rd, 2016

போக்குவரத்து நெரிசலினால் வீணடிக்கப்படும் எரிபொருளின் செலவை பயணிகள் கட்டணத்திலிருந்து அறவிடுவது தொடர்பிலான இறுதி தீர்மானத்தை போக்குவரத்து அமைச்சர் முடிவு செய்வாரென தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் எம்.பி.ஏ. ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

எரிபொருளின் செலவை பயணிகள் கட்டணத்திலிருந்து அறவிடுவது தொடர்பிலான வேண்டுகோளை தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் ஆணைக்குழுவுக்கு முன்வைத்துள்ளது.

போக்குவரத்துத் துறை அமைச்சரிடம் இந்த விடயம் தொடர்பிலான அறிக்கையை கையளித்ததன் பின்னர் கட்டணங்கள் தொடர்பிலான இறுதித்தீர்மானம் எட்டப்படும் என்றார்.

Related posts: