போக்குவரத்துச் சேவையில் 5600 பேருந்துக்கள் !

Saturday, December 9th, 2017

இலங்கையில் தொடருந்து சேவைகள் நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து கடுகதி சேவைகளுக்கு பதிலாக சொகுசுப் பேருந்து சேவைகளை போக்குவரத்துசபை மேற்கொண்டுள்ளது.

இன்று காலை 5 மணிக்கு காங்கேசன்துறை,  யாழ்ப்பாணம் மற்றும் கண்டி உள்ளிட்ட தூர இடங்களுக்கு இந்த சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகபோக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

கடுகதி தொடருந்து சேவை நடைபெறாததால், ஐந்து சொகுசு பஸ்வண்டிகளை சேவையில் ஈடுபடுத்தியுள்ளது.

தொடருந்துப் பிரிவின்  வேலைப்பகிஷ்கரிப்பால் பயணிகள் எதிர்நோக்கும் சிரமங்களைத் தவிர்க்கும் பொருட்டு இலங்கை போக்குவரத்து சபையானது5600 பேருந்துக்களை சேவையில் ஈடுபடுத்தியுள்ளது.

தொடருந்தின் பருவகாலச்சீட்டை பயன்படுத்தி இலவசமாக இலங்கை பேருந்து சேவைகளை பெற்றுக்கொள்வதற்கான வசதிகளும்செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த பஸ்சேவைகளை 12 பிராந்திய சாலைகளை ஒன்றிணைத்து முன்னெடுப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம் என்று அதன் உயர்அதிகாரி பி.எச்.ஆர்.ரி சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

Related posts: