பொலிஸ் விளையாட்டு வீரர்களை கௌரவிக்கும் வர்ண இரவு!

Saturday, January 28th, 2017

இலங்கைப் பொலிஸ் விளையாட்டு வீரர்களை கௌரவிக்கும் வர்ண இரவு எதிர்வரும் 31ஆம் திகதி கொழும்பு நெலும் பொக்குன கலையரங்கில் இடம்பெறவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ்மா அதிபருமான பிரியந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.

கொழும்பு குற்றத்தடுப்பு திணைக்கள கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ்மா அதிபருமான பிரியந்த ஜயக்கொடி இது குறித்து தெரிவிக்கையில்:

இந்த நிகழ்வு இம்முறை 12 ஆவது முறையாக நடைபெறவுள்ளது. இது 1968 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. 8 வருடங்களின் பின்னர இம்முறை 12 ஆவது வர்ண இரவு இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.

இதற்கான முழுச் செலவு 60 மில்லியன் ரூபா. பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர சிறந்த விளையாட்டு வீரர். இவர் பொலிஸ் விளையாட்டுப்பிரிவு வர்ண விருது பெற்றவர்.அவரின் வேண்டு கோளுக்கு அமைய இந்த விருது வழங்கல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரதம விருந்தினராக கலந்து கொள்ளவுள்ளார்.

அதிதிகளாக சட்ட ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்தநாயக்க,விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிரி ஜயசேகர, பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியேர்ர் பங்கு கொள்கின்றனர். பொலிஸ் விளையாட்டுப்பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர், பொலிஸ் விளையாட்டுப் பிரிவின் பணிப்பாளர் மற்றும் பொறுப்பதிகாரி உள்ளிட்டோர் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

95c088b9f8063efba4748a7d9aaf9d15_XL

Related posts: