பொலிஸ் பாதுகாப்பில் இருந்து கைதி தப்பியோட்டம்!

Monday, April 18th, 2016

யாழிப்பாணத்தில் பொலிஸாரின் பாதுகாப்பில் இருந்த சந்தேகநபர் ஒருவர் தப்பியோடியுள்ளார்.

அண்மையில் ஆனைக்கோட்டை – ஆறுகால்மடம் பகுதியிலுள்ள வீடொன்றில் மோட்டார் சைக்கிளை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் இரு இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டனர். கிளிநொச்சியில் வைத்து கடந்த வெள்ளிக்கிழமை யாழ். பொலிஸாரினால் அவர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டனர்.

இதனையடுத்து, பொலிஸ் தடுப்பில் வைக்கப்பட்டிருந்த குறித்த சந்தேகநபர்களை சனிக்கிழமை, நீதிவானின் வாசஸ்தலத்தில் ஆஜர்படுத்துவதற்காக பொலிஸார் பொலிஸ் நிலையத்திற்கு வெளியில் அழைத்து வந்தனர்.

இதன்போது அதில் ஒருவர் தப்பி ஓடியுள்ளார். ஏனைய இளைஞரை நீதிபதியின் வாசஸ்தலத்தில் ஆஜர்படுத்தியதுடன், தப்பி ஓடி கைதி தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

Related posts: