பொலிஸ் உத்தியோகத்தரே திட்டமிட்டு வாள்களை கராச்சினுள் வைப்பித்தார் விசாரணைகளில் தெரிவிப்பு!

Tuesday, December 13th, 2016

அச்சுவேலியில் உள்ள கராச் ஒன்றின் உரிமையாளர் மீது அச்சுவேலிப் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு இருந்த தனிப்பட்ட விரோதம் காரணமாகவே அவருடைய கராச்சில் வாள் மற்றும் கூரிய ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டன என்று விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கராச்சில் கஞ்சா பொதியையும் மறைத்து வைத்தாக பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தனது வாக்கு மூலத்தில் தெரிவித்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

அச்சுவேலி புத்தூர் பகுதியில் உள்ள கராச் ஒன்றில் ஆயுதங்கள் இருப்பதாக பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்ற பொலிஸார் 2 வாள், 2 கை கிளிப் மற்றும் கூரிய இரும்பு ஆயுதங்களை மீட்டனர். இதனையடுத்து கராச் உரிமையாளர் உட்பட 4 பேர் அச்சுவேலிப் பொலிஸாரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது அச்சுவேலிப் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரேதன்னிடம் கூரிய ஆயுதங்களை ஒப்படைத்து, அவற்றைக் குறித்த கராச்சில் வைக்குமாறு தெரிவித்ததாக அந்த ஆயுதங்களை வைத்தார் என்ற குற்றச்சாட்டில் கைத செய்யப்பட்ட இளைஞர் விசாரணையில் தெரிவித்தார். இதனையடுத்து விசாரணைகளின் பின்னர் சந்தேக சபரால் குற்றம் சாட்டப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரால் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டார். நேற்று முன்தினம் மாலை கைது செய்யப்பட்ட இருவரும் மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். விசாரணைகளை மேற்கொண்ட மல்லாகம் நீதிவான் வாள் மற்றும் கூரிய ஆயதங்களை தயாரித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பட்டறை உரிமையாளரை ஆள் பிணையில் செல்ல அனுமதித்தார். 2ஆவது சந்தேக நபரை வாள் மற்றும் கூரிய ஆயுதங்களை கராச்சில் வைத்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞரை 14 நாள்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். கஞ்சாவை கண்டறியும் முகமாக நேற்று முன்தினம் மாலை குறித்த கராச் மீண்டும் அச்சுவேலிப் பொலிஸாரால் சோதனைக்குட்படுத்தப்பட்டது. என்று தெரிவிக்கப்பட்டது.

kathi-864ews

Related posts: