பொலிஸ் உதவி சேவையாளர்களுக்கான  சம்பள உயர்வு  தற்போது சாத்தியமற்றது – அமைச்சர் சாகல!

Friday, October 28th, 2016

பொலிஸ் உதவி சேவையாளர்களுக்கு சம்பள உயர்வை வழங்குவது இப்போதைக்கு சாத்தியப்படாது என சட்டம் ஒழுங்கு மற்றும் தென்மாகாண அமைச்சர் சாகல ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.

பொலிஸ் மா அதிபரின் சுற்றறிக்கையின் பிரகாரமே  பொலிஸ் உதவி சேவையாளர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு தேவையான வசதிகளை நாங்கள் அவ்வப்போது செய்துள்ளோம் என்று சுட்டிக்காட்டினார்

பாராளுமன்றத்தில் நேற்று நிலையியற் கட்டளை 23இன் கீழ் இரண்டில் எதிர்க்கட்சி பிரதம கொறடாவும், ஜே.வி.பி. தலைவருமான அநுரகுமார திஸாநயக்க எம்.பி, 1998 ஆம் ஆண்டு பொலிஸ் உதவி சேவையாளர்களாக இணைத்துகொள்ளப்பட்டவர்கள்  குறைந்தளவான சம்பளத்தில் இன்னுமே நிரந்தரமாக்கப்படாமல் சேவையில் இருக்கின்றனர். அவர்களை நிரந்தமாக்குவதில் சிக்கல்கள் இருக்கலாம். அவர்களின் சேவையை கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்

கருணா பிரிவில் இருந்தவர்களில் 2 ஆயிரம் போர் பொலிஸ் சேவையில் இணைந்துகொள்ளப்பட்டு நிரந்தரமாக்கப்பட்டுள்ளனர். யுத்தக்காலத்தில் ஒருமுகாமில் இருந்தவர்கள் நிரந்தமாக் கப்பட்டுள்ளனர். எதிர்முனை முகாமில் இருந்தவர்கள் இன்னுமே நிரந்தரமாக்கப்படாமல் இருக்கின்றனர்.  ஆகையால் அந்த 1477 பேரின் மீதும் விசேட அகவம் செலுத்தினால் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணலாம் என்றார்

அதற்கு பதிலளித்த சட்டம் ஒழுங்கு மற்றும் தென்மாகாண அமைச்சர் சாகல ரட்நாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்

பொலிஸ் உதவி சேவையாளர்களுக்கு சம்பள உயர்வை வழங்குவது இப்போதைக்கு சாத்தியப்படாது. பொலிஸ் மா அதிபரின் சுற்றறிக்கையின் பிரகாரம் இணைந்துகொள்ளப்பட்ட அந்த அதிகாரிகளுக்கு நடவடிக்கை வலயக் கொடுப்பனவு கிடைக்கும். அவ்வாறான வலயங்கள் பெயரிடப்பட்டுள்ளன.

அந்த சுற்றறிக்கையின் பிரகாரம் பொலிஸ் உதவி சேவையாளர்களின் ஆகக்குறைந்த கல்வித்தகுதி 8ஆம் வகுப்பாகும். இவர்களை நிரந்தரமாக்குவதில் சிக்கல்கள் இருக்கின்றன. ஆகையால் அந்த விடயத்தை மிகமிக கவனமாகவே கையாள்கின்றோம் என்றார்.

sagala-ratnayaka-380-seithy

Related posts: