பொலிஸ் இடமாற்றத்தில் அரசியல் அழுத்தம் இல்லை -அமைச்சர் ரஞ்ஜித் மத்தும பண்டார தெரிவிப்பு!

Thursday, May 17th, 2018

பொலிஸ் அதிகாரிகளின் இடமாற்றம் தொடர்பில் அரசியல்வாதிகள் சிலர் அழுத்தம் கொடுத்ததாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை நான் நிராகரிக்கிறேன் என பொது நிர்வாக முகாமைத்துவம், சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் ரஞ்ஜித் மத்துமபண்டார தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தெரிவித்ததாவது:

பொலிஸ் பதவி உயர்வு, ஆட்சேர்ப்பு மற்றும் இடமாற்றம் தொடர்பில் தெளிவான வழிமுறை ஒன்றைத் தற்போது முன்னெடுக்கிறோம். பொலிஸ் சீர்திருத்த நடவடிக்கைகள் தொடர்பில் ஆய்வு செய்யத் தனியான ஒரு குழுவை நியமித்து அவர்களின் மூலம் பெறப்படும் அறிக்கைகளைக் கொண்டு யாருக்கும் அநீதி ஏற்படாத விதத்தில் பொலிஸ் இடமாற்றங்களை மேற்கொள்ளவுள்ளோம்.

பொலிஸில் உள்ள அனைத்துக் குறைபாடுகளையும் விரைவில் நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளோம் என்றார்.

Related posts: