பொலிஸார் மீது தாக்குதல் : யாழ்ப்பாணத்தில் சம்பவம்!
Wednesday, August 29th, 2018மணியந்தோட்டம் பகுதியில் நடமாடும் பொலிஸ் அதிகாரிகள் மீது இனந்தெரியாதோரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
முச்சக்கரவண்டியில் பயணித்த சிலரே பொலிஸார் மீது தாக்குதல் நடத்திவிட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த முச்சக்கரவண்டியை இடைமறித்து விசாரித்தவேளையிலேயே பொலிஸார் மீது இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மேலும், இதன்போது படுகாயமடைந்த ஒரு பொலிஸ் அதிகாரி யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மற்றொரு பொலிஸாரும் படுகாயமடைந்துள்ளதாகவும் அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
Related posts:
இதை உண்டால் சந்ததியே பலியாகும்: எச்சரிக்கை!
இலங்கையின் மொத்த சனத்தொகையில் 50 வீதத்திற்கும் அதிகமானோருக்கு முழுமையாக தடுப்பூ வழங்கப்பட்டுள்ளது - ...
உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடத்தப்படும் - மஹிந்த தேசப்பிரிய நம்பிக்கை!
|
|