பொலிஸார் நால்வர் பணிநீக்கம்!

Thursday, September 15th, 2016

ஹம்பாந்தோட்டை பொலிஸ் நிலையத்தில் கைதி ஒருவர் காணாமல் போனமையால் அங்கு கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரிகள் நால்வர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இளைஞன் காணாமல் போனமை தொடர்பில் மேற்கொண்ட விசாரணைகளுக்கு அமையவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த சம்பவத்தை அடுத்து அண்மையில் குறித்த பொலிஸ் நிலையத்தின் பொலிஸார் பலருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 9ஆம் திகதி பதகிரிய நெல் களஞ்சியசாலையில் இருந்து 80 மூட்டைகள் நெல்லினை திருடியமை தொடர்பிலேயே குறித்த இளைஞன் கைதுசெய்யப்பட்டு பின்னர் காணாமல் போயுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

police-officers-suspended

Related posts: