பொலிசாருக்கு எதிராக ஆயிரத்து 521 அடிப்படை உரிமை மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல்!

Friday, March 17th, 2023

அடிப்படை உரிமை மீறல் தொடர்பில், காவல்துறை திணைக்களத்திற்கு எதிராக, பல்வேறு தரப்பினரால், இதுவரையில் ஆயிரத்து 521 அடிப்படை உரிமை மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

பேராசிரியர் அர்ஜுன பராக்கிரம தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு, நேற்றையதினம் உயர்நீதிமன்றில் அழைக்கப்பட்டது.

இதன்போது சட்டமா அதிபர் சார்பில் மன்றில் முன்னிலையாகிய சிரேஷ்ட சட்டத்தரணி சமிந்த விக்ரம முன்வைத்த சமர்ப்பணத்தில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: