பொறுப்புக்கூறலை மையைமாக கொண்டு நல்லிணக்கம் – பிரதமர் !

Friday, June 9th, 2017

உண்மையை கண்டறிதல் மற்றும் பொறுப்புக்கூறல் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு நாட்டில் நல்லிணக்கம் ஏற்படுத்தப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவிற்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும், .நா. பொதுச் செயலாளர் அந்தோனியோ குட்டெரஸிற்கும் இடையிலான சமகால அரசியல் நிலைமைகள் குறித்த பேச்சுவார்த்தையின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.மேலும், அரசமைப்பு மீளமைப்பு, நல்லிணக்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஏனைய விடயங்களைக் கட்டியெழுப்புதல் போன்ற விடயங்களில் நல்லாட்சி அரசாங்கம் கவனம் செலுத்தும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, உண்மையைக் கண்டறிதல், பொறுப்புக்கூறல், நட்டஈடு வழங்கல், மீள் நிகழாமை ஆகிய நான்கு காரணிகளை அடிப்படையாகக்கொண்டு இலங்கையில் நல்லிணக்கம் ஏற்படுத்தப்படும் எனவும் கூறியுள்ளார்.இந்நிலையில், நல்லிணக்க செயற்பாட்டில் .நா. அலுவலகம் இலங்கையுடன் இணைந்து செயற்படும் என்றும், இலங்கை சிறந்த நிலைக்கு வரவேண்டும் என்பதே .நா.வின் எதிர்பார்ப்பு எனவும் .நா. செயலாளர் தெரிவித்துள்ளார்.

Related posts: