பொறுப்பற்ற சாரத்தியம் குடும்பத் தலைவரின் உயிரைப் பறித்தது!

கண்பார்வை குறைபாடுடைய சாரதி, ஹன்ரர் வாகனத்தைச் செலுத்திச் சென்று சாலையின் ஓரமாகத் துவிச்சக்கர வண்டியில் சென்றவரை மோதித் தள்ளினார். இந்த விபத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த குடும்பத் தலைவர் படுகாயமடைந்தவர் சிகிச்சை பயனளிக்காது உயிரிழந்தார் என தெரிவிக்கப்படுகின்றது.
ஹன்ரர் சாரதியின் சாரதி அனுமதிப் பத்திரம் புதுப்பிக்கத் தேவையில்லை என்று கூறப்பட்டதால் இந்த நிலை ஏற்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விபத்து வடமராட்சி வல்லையில் கடந்த 25ஆம் திகதி இடம்பெற்றது. படுகாயமடைந்தவர் சிகிச்சை பயனளிக்காது நேற்று முன்தினமிரவு உயிரிழந்தார். புத்தூர் கலைமதி வீதியைச் செர்ந்த வைரவன் குணசிங்கம் (வயது43) என்பவரே உயிரிழந்தார். மீன் விற்று பிழைப்பு நடத்தும் அவர் பருத்தித்தறைக்கு மீன் வாங்கிச் சென்று விற்பனையில் ஈடுபடுவர். அவ்வாறு சென்றிருந்த போதே இவ்விபத்து இடம்பெற்றது. அவருக்கு 4பிள்ளைகள். குறித்த விபத்தில் சம்பந்தப்பட்ட சாரதி பிணையில் விடுவிக்கப்பட்டார். 1972ஆம் ஆண்டு வழங்கப்பட்ட வாரதி அனுமதிப்பத்திரம் உள்ளது. குறித்த வருடத்தை அண்மித்த காலங்களில் வழங்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரம் புதுப்பிக்கத் தேவையில்லை எனக்கு கண் பார்வை குறைவு. குறித்த குடும்பத் தலைவர் வீதியில் சென்று கொண்டிருந்ததைக் காணவில்லை. கண் பார்வை குறைவு என்று அவர் விசாரணையில் கூறியுள்ளார். திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் மற்றுமு; பொலிஸார் விசாரணை மேற்கொண்டனர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
Related posts:
|
|