பொறிக்கப்பட்ட விலையை விட அதிக விலையில் உர விற்பனை – கிளிநொச்சி விவசாயிகள் குற்றச்சாட்டு!

Tuesday, November 29th, 2016

உரப்பையில் பொறிக்கப்பட்ட விலையைவிட அதிக விலையில் கிளிநொச்சி கமநல சேவைகள் திணைக்களத்தால் உரம் விற்பனை செய்யப்படுகின்றது என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். அரசின் புதிய திட்டத்துக்கு அமையவே உரம் விலை மாற்றம் செய்யப்பட்டது – என்று கிளிநொச்சி கமநல அபிவிருத்தித் திணைக்கள உதவிப் பணிப்பாளர் தயாபரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி கமநல சேவைகள் திணைக்களத்தால் வழங்கப்பட்ட உரம் புளியம் பொக்கணை கமநல சேவைகள் நிலையத்தில் வைத்து வழங்கப்பட்டது. உரம் அடைக்கப்பட்ட பையில் 350ரூபா விலை பொறிக்கப்பட்டது. அவை 2,500ரூபாவுக்கே எமக்கு விற்பனை செய்யப்பட்டது என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே கொள்வனவு செய்யப்பட்ட உரம் தற்போது அரசால் கொண்டுவரப்பட்ட திட்டத்துக்கு அமைய 2,500ரூபாவுக்கு விலை மாற்றப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றது. சில தனியார் நிறுவனங்கள் உரத்தை குறைந்த விலையில் விற்பனை செய்கின்றனர். பற்றுச்சீட்டில் 2,500ரூபா என குறிப்பிடுகின்றனர். – என்று கிளிநொச்சி கமநல அபிவிருத்தித் திணைக்கள உதவிப் பணிப்பாளர் தயாபரன் மேலும் தெரிவித்துள்ளார்.

images-42

Related posts: