பொருள் ஏற்றியிறக்க யாழ்.நகரில் வலயம்!

Thursday, October 13th, 2016

யாழ்.நகரில் ஆஸ்பத்திரி வீதியில் சத்திரச் சந்திக்கும் ஒளவையார் சிலைக்கும் இடைப்பட்ட பகுதியைப் பொருள்களை ஏற்றி இறக்கும் வலயமாக மாற்றப்பட்டுள்ளது என்று யாழ்.மாநகரசபை அறிவித்துள்ளது.

இந்தப் பகுதியில் வாகனங்கள் தரிப்பதற்கு எந்த வித அனுமதியும் வழங்கப்படமாட்டாது என யாழ்.மாநகர ஆணையாளர் பொ.வாகீசன் தெரிவித்தார். இந்த வீதியில் வர்த்தகர்கள் வாகனங்களில் இருந்து பொருட்களை ஏற்றி இறக்க முடியும். கனரக வாகனங்கள் யாவும் மாலை 6 மணி தொடக்கம் மறுநாள் காலை 6 மணிவரை போக்குவரத்திற்கு இடைஞ்சல் ஏற்படாத வண்ணம் பொருள்களை ஏற்றி இறக்க முடியும். பொருட்களை ஏற்றி இறக்கும் வாகனங்களைத் தவிர ஏனைய வாகனங்கள் இந்த இடத்தில் தரிப்பதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது. இது ஒரு தற்காலிக ஏற்பாடு முனிஸ்வரன் வீதியில் குறுக்கே செல்லும் கந்தப்பசேகரம் வீதியைச் சீரமைக்கும் பணிகள் அடுத்த வாரத்தில் ஆரம்பிக்கப்படும். இந்த வீதி சீரமைக்கப்பட்டால் வர்த்தக நிலையங்களுக்கான பொருள்களை ஏற்றியிறக்கும் பணிகள் இந்த வீதியூடாக மேற்கொள்ளப்படும். என்று ஆணையாளர் கூறினார்.

52efcd815fb702Jaffna-road-signals-9-600x358

Related posts: