பொருளாதார நிலையில் பின்தங்கிய மாணவர்களுக்கு வடமாகாண சபை நிதியிலிருந்து உதவி வழங்கும் செயற்திட்டம் ஆரம்பம்!
Tuesday, July 5th, 2016
வடக்கு மாகாணத்திலிருந்து பல்கலைக் கழகங்களுக்குத் தெரிவாகிய பல்கலைக் கழக மாணவர்களில் பொருளாதார நிலையில் பின்தங்கிய நிலையில் கல்வியைத் தொடர முடியாதவர்கள் தமது கல்விச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு வசதியாக வடமாகாண சபை நிதியிலிருந்து உதவி வழங்கும் செயற்திட்டமொன்றை வட மாகாண சபை ஆரம்பித்துள்ளது.
பொருத்தமான மாணவர்கள் வடமாகாண சபை உறுப்பினர்களுடாக அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதேசத்திலிருந்து தெரிவு செய்யப்படவுள்ளனர். குறித்த திட்டத்தைப் பெற்றுக் கொள்ள விரும்புவர்கள் தத்தமது பிரதேச மாகாண சபை உறுப்பினரின் சிபாரிசுடன் வடமாகாணப் பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத் துறை இளைஞர் விவகார அமைச்சுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்கப்பட்டுள்ளது.
Related posts:
குறைந்தளவு நீரைப் பயன்படுத்தி விவசாயத்தை மேற்கொள்ளவும் யாழ்.அரச அதிபர் கோரிக்கை!
தேசிய எரிபொருள் விநியோக அட்டையை பெறுவதற்கு பல வாகனங்களை கொண்ட வர்த்தக நிறுவனங்கள் அனைத்து வாகனங்களை ...
நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் - வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறுல்!
|
|